கார்காலக் காதல்
கார்காலக் காதல்.......
கடல் காற்றழுத்தம் காற்றாடியாய் கரை கலக்கும்
காற்றின்திசைக்கு கண்மாய் காத்திருக்கும்
கார்முகிலை கண்டு
ககனம் கார்மேகம் கொள்ளும் ,
காரிருள் கவர்ந்து கருகன் களிக்கும்,
கனமழை கரைசேரும், குளம் கண்மாய் கரைபுரளும்
கார்காலம்.....
கவலைகள் கவிழ்ந்து களிப்புடன் கடக்கும்
- நெல்சன் முன்னா
| Linkdin |
Comments
Post a Comment